கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் காலமானார்

கிள்ளியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான் ஜேக்கப் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான் ஜேக்கப் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

2011சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜான் ஜேக்கப். இந்நிலையில், உடல்நலக்குறைவால் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான் ஜேக்கப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜாக் ஜேக்கப், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வாசன் தொடங்கிய போது காங்கிரஸில் இருந்து விலகி அதில் இணைந்தார். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் கிள்ளியூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஜான் ஜேக்கப் இன்று காலமானார்.

×Close
×Close