Advertisment

பிரபல கிரிக்கெட் வீரருக்கு தமிழக பா.ஜ.க-வில் பதவி

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
laxman sivaramakrishnan

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக இருந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக பாஜகவின் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணைத் தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அவர்களை நியமிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் சிறப்பான பங்களிப்பும், விளையாட்டை ஊக்குவிப்பதில் உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக உங்கள் அனுபவம் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஆகியவற்றின் முயற்சிகளை பெரிதும் மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளவர், உங்கள் பாரம்பரியம் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்", என அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment