Advertisment

கைதி உடையில் கருணாநிதி.. எச்சரித்த எம்.ஜி.ஆர்.. முன்னாள் டிஐஜி தகவல்

சிறை சென்ற கருணாநிதிக்கு கைதி உடை அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். எப்படி கைதி உடை அவருக்கு அளிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Former DIG Ramachandran said that MGR had warned Karunanidhi that he had been given prison clothes in jail

கருணாநிதி ஏற்கனவே முரசொலி அலுவலகத்தில் இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தி, கைதி உடையில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

முன்னாள் சிறைத்துறை டிஐஜி ராமச்சந்திரன் தனியார் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து கடந்த கால நினைவலை ஒன்றை பகிர்ந்துக் கொண்டார்.

Advertisment

அப்போது அவர் கூறுகையில், “கருணாநிதிக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடனே சட்டவிதிப்படி அவருக்கு ஒரு வேலையும், கைதி உடையும் கொடுக்க வேண்டும்.
அதன்படி சாயங்காலம் 4 மணிக்கு வெள்ளை கைதி உடையை அவருக்கு கொடுத்தோம். மறுநாள் காலை அதே உடையில் அவர் நேர்காணலுக்கு சென்றுவிட்டார்.

இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அப்போது நீங்கள் கைதி உடை அணியத் தேவையில்லை. நீங்கள் ஏ வகுப்பு சிறைக் கைதி என்றேன். மேலும் அரசியல்வாதிகளை ஏ வகுப்பு சிறை கைதிகளாக மாற்றியதும் கருணாநிதிதான்.
ஆகவே நீங்க உங்களது உடையை உடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த விவகாரம் அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் புகைப்படத்துடன், “கைதி உடையில் கருணாநிதி” என வந்தது.

அந்தப் புகைப்படத்தில் தட்டு, ஒரு டம்ளரும் காணப்பட்டது. இந்தப் புகைப்படம் எப்படி எடுத்தார்கள்? என எனக்கு ஒரே குழப்பம். ஏனெனில் அப்போது புகைப்படம் எடுக்க அரசின் அனுமதி தேவை.
இந்தக் குழப்பத்துக்கு அவரே விடை கொடுத்தார். கருணாநிதி ஏற்கனவே முரசொலி அலுவலகத்தில் இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தி, கைதி உடையில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

இந்த உண்மை தெரியவருவதற்குள் டிஜிபி அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. கருணாநிதிக்கு சிறை உடை கொடுத்தீர்களா? ஆம் கொடுத்தேன் என்றேன். அவர் எப்படி கொடுக்கலாம் எனக் கேள்வியெழுப்பினார்.
நான் கடுங்காவல் தண்டனை என்பதால் சிறை உடை கொடுத்தேன் என்றேன். அப்போது கைதி உடை கொடுக்க வேண்டாம் என்றார். மேலும் கைதி உடை வேண்டாம் என்று நான் சொன்னாலும் கருணாநிதி கேட்டிருக்க மாட்டோர்.

அவரே வாங்கி மாட்டியிருப்பார். அப்படிஆளுதான் அவர் என்றார். தொடர்ந்து டிஜிபி என்னிடம் அவரை சாதாரண உடை அனுமதிக்கும்படியம் கேட்டுக்கொண்டார். முன்னதாக அவருக்கு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் போன் செய்து இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்றார்.

முன்னாள் டிஐஜி ராமச்சந்திரனின் இந்த நேர்காணல் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Karunanithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment