ஜெயலலிதா ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரி நல்லம நாயுடு மரணம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடு மரணமடைந்தார்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83.

1961ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துபடிப்படியாக பதவி உயர்வு பெற்று, பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது,குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தார். இது ஜெயலலிதா தனது பதவியை இழந்து சிறை செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

அதே போல, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களையும் ‘என் கடமை. ஊழல் ஒழிக!’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Former dvac sp nallamma naidu passed away due to age factor

Next Story
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணை வெடி வைத்து தகர்ப்புThalavanur, Viluppuram, today news, tamil news, tamil nadu news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com