/tamil-ie/media/media_files/uploads/2021/11/thiruppugazh-ias.jpg)
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையின் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு உருவாக்கும் தமிழ்நாடு அரசின் குழுவில் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கை பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் இடம்பெற்றுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வி. திருப்புகழ், குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் முக்கியப் பதவியில் பணியாற்றியுள்ளார். பின்னர், பிரதமர் முன்னாள் தலைவராக என்.டி.எம்.ஏ-வில் (கொள்கை மற்றும் திட்டம்) கூடுதல் செயலாளராக இருந்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் பிரதமருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் கீழ் பணிபுரிந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி. திருப்புகழ் பிரதமரின் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (என்.டி.எம்.ஏ) பணியாற்றியவர். இவர் சென்னையில் வெள்ள அபாயத்தைக் குறைப்பது மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவை வழிநடத்த திமுக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1991ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான திருப்புகழ், அவருடைய பணிக்காலத்தில், குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் முக்கிய பதவியில் பணியாற்றினார். பின்னர், பிரதமர் தலைவராக உள்ள என்.டி.எம்.ஏ-வில் கூடுதல் செயலாளராக (கொள்கை மற்றும் திட்டம்) இருந்தார்.
அவர் என்.டி.எம்.ஏ-வில் இருந்தபோது, ஜூன் 2017-ல் சென்னை மற்றும் காஞ்சிபுரத்திற்கு பார்வையிட வந்த ஒரு குழுவை வழிநடத்தினார். அவரது குழுவின் கண்டுபிடிப்புகள், என்.டி.எம்.ஏ-வால் வெளியிடப்பட்ட ‘தமிழ்நாடு வெள்ளம் - கற்றுக்கொண்ட பாடங்கள் & சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தன.
தலைமைச் செயலாளர் இறையன்புவின் சகோதரர்
பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதல்வராக இருந்தபோது, ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ், அப்போது மோடியின் செயலாளராகப் பணியாற்றியதால், குஜராத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த திருப்புகழ், பிரதமருக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டார். ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதோடு, அவர் தமிழக தலைமைச் செயலாளர் வி. இறையன்புவின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இறையன்புவின் மற்றொரு உடன்பிறந்த சகோதரர், மோடியின் தேர்வு வீரர்கள் என்ற புத்தகத்தை 2018-ல் பரிட்சைக்குப் பயமேன் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த குழு அமைப்பது தொடர்பாக அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் சென்னை இயற்கை பேரிடர் மற்றும் புயல் பாதிப்புக்கு உள்ளாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையின் நிலப்பரப்பு தட்டையானது, பெரும்பாலான பகுதிகள் சராசரி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 2 மீ உயரத்தில் இருந்தது, சில பகுதிகள் கடல் மட்டத்திற்கு கீழே இருந்தன.
சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2,500 க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அனைத்து நீரும் அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி கூறுகையில், “இந்த அனைத்து காரணிகளின் ஒருங்கிணைந்த நீரியல் விளைவால் மழைக்காலத்தின் போது வெள்ளம் மற்றும் நீர்ப்பாசனத்தை நிர்வகிப்பதை கடினமாக்குகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில் மழைநீர் வடிகால்களை வடிவமைக்கவும், வெள்ளத்தடுப்பு முறைகளை வகுக்க சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்களை கொண்ட சென்னை மெட்ரோ வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் அறிவித்தார்.
இந்த குழுவின் உறுப்பினர்கள்: டெல்லியில் உள்ள நகர மற்றும் கிராம திட்டமிடல் அமைப்பின் தலைமை திட்டமிடுபவர், நம்பி அப்பாதுரை; காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவனத்தின் இயக்குனர், எம்.ஐ.டி.எஸ் ஜானகிராமன்; மும்பை ஐஐடி-யின் சிவில் இன்ஜினியரிங் துறையின் கபில் குப்தா; அண்ணா பல்கலைக்கழகத்தின் மனித குடியேற்ற மையத்தின் இயக்குனர், பிரதீப் மோசஸ், ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்திறன் துறையின் பிரதிநிதி ஒருவர், அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள தொலை உணர்வுக் கழகத்தின் திருமலைவாசன்; பாலாஜி நரசிம்மன், ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர்; சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மைத் திட்டமிடுபவர், சென்னை மாநகராட்சியின் புயல் நீர் வடிகால் துறையின் தலைமைப் பொறியாளர், பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர்-நீர் ஆதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளர் மற்றும் சுற்றுச்சூழல் இயக்குநர் ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.