Advertisment

பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Tamilnadu BJP New Leader : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

TN BJP New Leader Annamalai Ips : தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் கடந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்க பணி நேற்று நடைபெற்றது. இதில் புதியதாக 43 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மீன்வளத்துறை, விலங்கு நலவாரியம் மற்றும் தகவல்ஒளிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌவுந்திரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பின் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் போறுப்பு வகித்து வருகிறார். அவருக்குபின் கடந்த ஆண்டு எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அடிப்படையில வழக்கறிஞரான இவர், தான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற உடன் வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த யாத்திரைக்கு அப்போதைய ஆளும்கட்சியும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக அனுமதி மறுத்த நிலையில், எதிர்ப்பையும் மீறி எல்.முருகன் யாத்திரையை வெற்றிகரமான முடித்தார். இதனால் கட்சி மேலிடத்தின் நன்மதிப்பை பெற்ற அவர் தற்போது மத்திய அமைச்சராக பொறுப்பெற்றுள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த இருவருக்கும் அடுத்தடுத்து உயர் பதவிகளை வழங்கி பாஜக மேலிடம் கவுரவித்து வரும் நிலையில், தமிழகத்தில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரே தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

publive-image

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்த்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். தான் பணியில் இருக்கும்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் இங்கு பிரபலமடைந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். தொடர்ந்து தனது ஊரில் விவசாய பணிகளை மேற்கொண்ட வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார்.

குறுகிய காலத்திலேயே கட்சி மேலிடத்தின் நன்மதிப்பை பெற்ற அவர் தமிழக பாஜகவின்  துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அதிரடியாக செயல்பட்ட அண்ணாமலை எதிர்கட்சியின் விமர்சனங்களுக்கு தனது கூர்மையான கருத்துக்களின் மூலம் பதிலடி கொடுத்தார். மேலும் தற்போதைய ஆளும் கட்சி நீட் தேர்வை தடை செய்ய முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நீட் தேர்வு குறித்து தெளிவான புள்ளி விபரங்களுடன் அவர்களுக்கு பதிலடி கொடுத்து அளைவரையும் வியக்க வைத்தார்.

எதிர்கட்சிகளின் அத்தனை விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்த இவர் கடந்த தேர்தலில் தனது சொந்த ஊரான கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனாலும் ஆளும்கட்சியின் விமர்னங்களுக்கு பதில் கொடுத்து வரும் அண்ணாமலை கட்சியை ஒன்றிணைத்து வழிநடத்தவும், தமிழகத்தில் முன்னேக்கிய அரசியலை கொண்டு செல்ல சரியான தேர்வாக இருப்பார் என்று கருதிய பாஜக மேலிடம் தற்போது அவரை தமிழக பாஜக தலைவராக நியமித்துள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment