தமிழ்நாட்டில் குண்டு வைப்போம் என்று மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கர்னல் நீதிமன்றத்தில் நிபந்தணையற்ற மனிப்பு கோரியதால், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பாஜக, சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகரி கர்னல் பாண்டியன் என்பவர் தமிழ்நாட்டு அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியனார். ராணுவத்தில் குண்டு வைக்கவும், துப்பாக்கி சுடவும் எங்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள். இதை தமிழகத்தில் செய்ய வைத்துவிடாதீர்கள் என்று கூறினார்.
இது தொடர்பாக திருவலிக்கேணி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், இதுபோல மிரட்டல் விடுக்கும் வகையில் இனிமேல் பேசமாட்டேன் எனவும் அதற்கு மனிப்பும் கேட்பதாக குறிப்பிடபட்டது. நிபந்தனையற்ற மனிப்பு கேட்கப்பட்டதால், முன்ஜாமீன் வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்துபோட வேண்டும் என்று நிபந்தனை விக்திக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/