Advertisment

முன்னாள் அமைச்சர், தி.மு.க இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி மரணம்: ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், தி.மு.க இலக்கிய அணி தலைவியுமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 73.

author-image
WebDesk
New Update
 Indirakumari.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் அமைச்சரும், தி.மு.க இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி (73) உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 15) திங்கட்கிழமை காலமானார். இவர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 

Advertisment

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்தவர் இந்திரகுமாரி. கவிதை எழுதுவதிலும், மேடைப் பேச்சிலும் 

திறமையானவர். புலவரான இவர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்த இந்திரகுமாரி 1991-ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நாட்றாம்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர். 

1991 - 1996 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  இந்திரகுமாரி  2006-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்திரகுமாரி தி.மு.கவில் இலக்கிய அணியில் பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர் இலக்கிய அணியில் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இந்திரகுமாரி  உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில், “கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி அவர்கள் மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

புலவர் இந்திரகுமாரி அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment