/tamil-ie/media/media_files/uploads/2022/02/sivakami-ias-ilam-suruthi.jpg)
Former minister Paruthi Ilamvathuthi son Ilam Shruti beats Sivakami IAS in Chennai: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட சிவகாமி ஐஏஎஸ், முன்னாள் அமைச்சரின் மகன் பரிதி இளம்சுருதியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை; ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தாமதமாக தொடக்கம்; போடியில் ரகளை
இதில் சென்னை மாநகராட்சியின் 99 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவகாமி ஐஏஎஸ் அவர்களை விட 4000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சமூக சமத்துவப் படை கட்சி தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி, அதிமுக கூட்டணியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.