அ.தி.மு.க. மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வீடியோவில், “ராகுல் காந்தி உணவகத்தில் உணவருந்துகிறார். அப்போது அவர் அங்குள்ள பெண்களிடம் உரையாடிக் கொண்டே உணவருந்துகிறார்” இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ், திமுக அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தனியாக போட்டியிட்டது.
இந்த நிலையில் செல்லூர் ராஜூ ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். இது பல்வேறு அரசியல் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் தமிழநாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிமுக அணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது.
பாரதிய ஜனதா கூட்டணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணபபடுகின்றன. முன்னதாக 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“