/indian-express-tamil/media/media_files/2025/10/01/balaji-2025-10-01-12-55-31.jpg)
முதலமைச்சர் மீது விஜய் தாக்கு - கருத்து கூற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு!
கரூர் ரவுண்ட் டேபிள் , மதராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள் ஆகியவை இணைந்து, கரூர் சோமூர் அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு சென்னைக்கு சிறப்பு விமானப் பயணத்தை (Flight of Fantasy) ஏற்பாடு செய்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முயற்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பினார். மேலும், மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார்.
முன்னதாக கரூர் சம்பவம் குறித்து தமிழக அரசு மீது த.வெ.க-வினர் குற்றம் சாட்டி வருவது குறித்த கேள்விக்கு, மாணவர்கள் விமான பயண அனுபவத்திற்காக சொல்கின்றனர். அது நல்லபடியாக நடக்கட்டும் இன்னொரு நாள் பேசுகிறேன் என்றார்.
தொடர்ந்து நேற்று த.வெ.க தலைவர் விஜய் கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் என கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் அளிக்க மறுத்தவர் இன்னொரு நாள் பேசுவதாக கூறிவிட்டு சென்றார்.
கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இதுகுறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மாலை வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அதில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்படாத பிரச்சனை, கரூரில் மட்டும் எப்படி ஏற்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் பழிவாங்க வேண்டும் என்றால் என்னை பழி வாங்கி கொள்ளுங்கள் எனது தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என வீடியோ பதிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.