Advertisment

கூட்டுத் தலைமைதான் அதிமுகவுக்கு வலு சேர்க்கும் - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

ஓ.பி.எஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த முக்கிய நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்து விட்டதாக கூறி டெல்டாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு ஷாக் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஓ.பி.எஸ் வீட்டில் திடீர் ஆலோசனை: 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ் மகன் உசேன் நடக்கவில்லை' என புகார்

அதிமுகவில் தனக்கு விசுவாசம் காட்டிய பலரும் இப்போது இ.பி.எஸ் பக்கம் போய்விட்டாலும் இன்னமும் தஞ்சை மண்ணில் தன்னம்பிக்கை குறையாமல் நிற்கிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். கட்சி களேபரங்களால் சென்னைக்கும் தஞ்சைக்குமாய் பறந்துகொண்டிருந்தவர் தனது தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தை சுத்தமாக மறந்து போன நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இன்று அலுவலகம் சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisment

ஓ.பி.எஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த முக்கிய நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்து விட்டதாக கூறி டெல்டாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இ.பி.எஸ் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இ.பி.எஸ் செய்த பல சூழ்ச்சிகளைச் சொல்லாமல் அவருடைய நயவஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயகத்தை, சுய லாபத்திற்காக ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைகின்றார் என்பது அவருடைய நேற்றைய பேட்டி மக்களுக்கு தெளியப்படுத்தியுள்ளது.

செய்த சூழ்ச்சிகள் மற்றும் நயவஞ்சகங்கள் எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என ஓ.பி.எஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. இந்த இயக்கத்தின் வாளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள், தற்போது பிரிந்து சென்றவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதில் அவர்கள் வரக்கூடடாது, இவர்கள் வரக்கூடாது என்றில்லை, குறிப்பாக சசிகலா, டிடிவி.தினகரன் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், மேல்முறையீட்டுக்கு சென்று உள்ளார்கள், அதனை நாங்கள் சந்திப்போம் என்றார்.

மேலும், நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம், எடப்பாடி எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே, கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

மனக்கசப்புகளை மறந்து எதிர்காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக்கி மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆளுங்கட்சியாக கொண்டு வருகிற செயலை முன்னிறுத்திடத்தான் ஓ.பி.எஸ் அழைப்பு விடுத்தார்.

ஆனால், அதை இ.பி.எஸ் ஏற்க மறுத்து விட்டார். இதையொட்டி, அவர் வெளியிட் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், நேற்றைய தினமே இ.பி.எஸ் பக்கம் இருந்த வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஓ.பி.எஸ்-சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இப்படி தினமும் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர உள்ளனர். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார்.

ஒற்றைத்தலைமை குறித்த கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், " இந்த இயக்கம் கூட்டுத்தலைமை இருந்தால் தான் வலுவாக இருக்க முடியும்" என்றார். "அதிமுகவில் நடப்பது உள்கட்சி பிரச்சினை. இதில் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளை இணைத்து பேசாதீர்கள். அத்துடன் இப்பிரச்சினையில், மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

அழைப்பு விடுப்பது தான் ஓ.பி.எஸ்-சுக்கு வாடிக்கை என இ.பி.எஸ் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ஓ.பி.எஸ் இணையும் போது அவருடன் பேசியதை இ.பி.எஸ் மறந்து விட்டார். அதைச் சொல்ல இது தகுந்த நேரமில்லை. ஓ.பி.எஸ்-சை திட்டவட்டமாக சேர்க்க மாட்டோம் என்று இ.பி.எஸ் கூறுகிறார். அவர் சேராமல் இருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் சேர தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் ஓ.பி.எஸ்-ஸின் முகம் பொன் சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும். மேலும், ஓ.பி.எஸ் முக்கிய ஆவணங்களை திருடி சென்றுவிட்டதாக எடப்பாடி தொடுத்த புகார் தொடர்பான கேள்விக்கு, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் - பொருளார் என்கிற முறையில் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு என்னென்ன ஆவணங்கள் திருடுபோயுள்ளது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

இந்த பிரச்சினைகள் மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை, மேலும் எங்கள் பக்கம் எடப்பாடி சேராமல் போகட்டும், ஆனால் கோடான கோடி தொண்டர்கள் சேருவதற்கு தயராக உள்ளனர் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Aiadmk Vaithilingam Mp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment