மதுரை சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
தொடர்ந்து, அவர் கூட்டுறவுப் பிரிவு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வசம் சென்றுவிட்டார்.
இன்று அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்தார்.
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவர் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து பாஜக சென்ற அவர் தற்போது மீண்டும் அதிமுக வசமே சென்றுவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“