/tamil-ie/media/media_files/uploads/2020/06/a106.jpg)
former mp sasikala pushpa, tamil nadu news, tamil news, news, latest tamil news, சசிகலா புஷ்பா, தமிழக செய்திகள், டெல்லி ஐகோர்ட்,
அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேஸ்புக், கூகுள் , யூ டியூப் ஆகிய இணையதளங்களில் தன்னை அவதூறாகவும், தவறாகவும் சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குமாறு அந்த இணையதளங்களுக்கு உத்தரவிடக் கோரி கடந்த 2016ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா, வழங்கிய தீர்ப்பில், "மக்கள் பிரதிநிதி ஒருவர், தனது கணவர் அல்லாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுகளுக்கு பின்னால் சந்தித்தது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு.
நாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்
இதை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவதை பொதுநலன் சேர்ந்ததாக கருத முடியாது. அது போன்ற சந்திப்பிலும், அதை அவர் மறைக்க விரும்புவதிலும் பொதுநலன் உள்ளது என்று அவர் தரப்பு வாதங்களில் கூறவில்லை.
எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. மேலும், பேஸ்புக், கூகுள், யூடியூப் ஆகிய வலைத்தளங்களில் அவருடைய புகைப்படங்களை நீக்குமாறு கோரிக்கை விடுப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மனுதாரர் பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சமும், கூகுள் மற்றும் யூடியூப் ஆகிய இணையதள நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழக்குக்கான செலவினங்களுக்கு அபராதமாக வழங்க வேண்டும்" என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.