Advertisment

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் - முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு; பின்னணி என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், ரகுராம் ராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Former Reserve Bank Governor Raghuram Rajan meets CM MK Stalin, Former Reserve Bank Governor Raghuram Rajan, CM MK Stalin, Raghuram rajan - MK Stalin what discussed, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின், ரகுராம் ராஜன் - முக ஸ்டாலின் சந்திப்பு, Tamilnadu, advising committee, Tamilnadu CM Stalin

தமிழக வளர்ச்சிக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து பேசினார்.

Advertisment

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, அவருக்கு பொருளாதார ஆலோசனை அளிப்பதற்காக பொருளாதார ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜான் ட்ரீஸ், எஸ் நாராயண் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னள் ஆளுநர் ரகுராம் ராஜனும் உறுப்பினராக உள்ளார். இந்த குழுவின் பணி தமிழக அரசு வளர்ச்சி இலங்குகளை எட்டுவதற்கான ஆலோசனைகளை முதலமைச்சருக்கு வழங்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், கொரோனா பரவல் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், ரகுராம் ராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தமிழகத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

ரகுராம் ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போடு, தமிழக அரசு பொருளாதார வளர்ச்சி இலங்குகளை எட்டுவதற்கு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Cm Mk Stalin Raghuram Rajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment