/tamil-ie/media/media_files/uploads/2018/01/a158.jpg)
முன்னாள் சபாநாயகர் பி ஹெச் பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் சபாநாயகர் பி ஹெச் பாண்டியனின் மனைவி சிந்தியா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், தமிழ்நாடு உயர்கல்வி ஆணையத்தின் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த சிந்தியா பாண்டியன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிந்தியா பாண்டியனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சிந்தியா பாண்டியன் பி.ஹெச் டி முடித்தவர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக 2005 முதல் 2008 வரை பணியாற்றியவர்.
இவருக்கு மனோஜ் பாண்டியன், அரவிந்த பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மகன் மனோஜ்பாண்டியன் 2001ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சேரன்மகாதேவி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகித்துள்ளார் மனோஜ் பாண்டியன்.
இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிந்தியா பாண்டியனின் உடலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.