ஜெ. மரணம் குறித்த விசாரணை கமிஷன் : 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும்

ஜெயலலிதா மரண வழக்கில் 155 சாட்சியங்களை விசாரித்துள்ள நிலையில் இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்தும், ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 154 சாட்சிகளை விசாரித்துள்ள நிலையில் இனி 4 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க எஞ்சியுள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க முடியும் என ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

154 சாட்சிகளில், அப்பல்லோ மருத்துவமனை சேர்ந்த 56 மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்கள், தமிழக அரசு அமைத்த ஐந்து மருத்துவர்களின் மருத்துவக் குழு உட்பட 12 அரசு மருத்துவர்கள், 22 துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற சாட்சிகள் அடங்குவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Former tamil nadu cm j jayalalithaas death within a month probe panel tells sc

Next Story
News Highlights: காவல்நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயர்களை நீக்க டிஜிபி உத்தரவுSylendra Babu IPS, Sylendra Babu appointed as New DGP of Tamil nadu, Police DGP Sylendra Babu, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம், சைலேந்திர பாபு ஐபிஎஸ், சைலேந்திர பாபு டிஜிபி, புதிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாடு, New DGP Sylendra Babu, Tamil Nadu govt appoints new dgp Sylendra Babu, tamil nadu police, tamil nadu govt
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X