scorecardresearch

நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண் கல்வி அவசியம்.. அழகப்பா முன்னாள் துணை வேந்தர் பேச்சு

நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண் கல்வி அவசியம் என அழகப்பா முன்னாள் துணை வேந்தர் கூறினார்.

Former Vice Chancellor of Alagappa said that female education is essential for the progress of the country
அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தின விழாவில் கலந்துகொண்டார்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தின விழாவில் கலந்து கொண்ட அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை கே.சி.டபிள்யூ. கல்லூரியில் 2023 கல்வி ஆண்டு கல்லூரி தின விழா நடைபெற்றது.
கல்லூரி நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி செயலர் முனைவர் யசோதா முன்னிலை வகித்தார்.

முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சாதனை மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
அப்போது, “கிருஷ்ணம்மாள் கல்லூரியின் பல்வேறு சாதனைகளை பட்டியிலிட்டு கூறிய அவர், இந்தக் கல்லூரி பெண் கல்வியை போற்றும் விதமாகவே தொடங்கப்பட்டதாகவும்
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “நல்ல சமுதாயத்தை உருவாக்கிடவும் பெண் கல்வி அவசியம். ஆகவே கற்பதை கல்லூரியோடு நிறுத்தாமல் தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து, விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த கல்லூரி மாணவியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியைகள் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Former vice chancellor alagappa said that female education is essential for the progress of the country