/indian-express-tamil/media/media_files/xqPrvP6PBbrqleUBSAL4.jpeg)
Formula 4 Car Race Chennai Traffic Change diversion
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 பந்தய நிகழ்வான ‘சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட்’ சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.
இதையொட்டி இன்றும் நாளையும், (ஆக. 31, செப். 1) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலையில்
போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை , அண்ணா சாலை , பெரியார் சிலை. சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரெயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
அண்ணா சாலையில்
வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.
வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்
*காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
*சென்ட்ரல் லைட்டில் இருத்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
*முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை. ஈவிஆர் சாலை. சென்ட்ரல் ரெயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.
கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.