Advertisment

லஞ்ச ஒழிப்பு இயக்குனராக ஏ.கே சிங் ஐ.பி.எஸ் நியமனம்: மேலும் 3 ஏ.டி.ஜி.பி-க்கள் மாற்றம்

தமிழக காவல்துறையில் பணிபுரியும் 4 ஏ.டி.ஜி.பி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய்குமார் சிங் ஐ.பி.எஸ் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
39 IPS officers have been transferred in Tamil Nadu

TN Secretariat

தமிழக காவல்துறையில் பணிபுரியும் 4 ஏ.டி.ஜி.பி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய்குமார் சிங் ஐ.பி.எஸ் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

அதன்படி, ஏ.டி.ஜி.பி நிர்வாகம் தலைமை அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த வெங்கடராமன் சென்னை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சி.பி.சி.ஐ.டி-யில் ஏ.டி.ஜி.பி. ஆக இருந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், சென்னை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய்குமார் சிங் ஐ.பி.எஸ் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷன்ஸ் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த பால நாக தேவி ஐ.பி.எஸ், ஏ.டி.ஜி.பி தலைமை அலுவலகம் நிர்வாகத்தின் கூடுதல் பொறுப்பு ஏ.டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆயுதப்படை காவல் பிரிவின் ஜெயராம் ஐ.பிஸ் அதிகாரி ஜெயராம், சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment