வருகின்ற நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் 4 புறநகர் மின்சார ரயில்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் 4 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
4 புறநகர் ரயில்சேவைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இரவு 11.40 மணியளவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செயல்படும் ரயில் (40147), இரவு 11.59 மணியளவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செயல்படும் ரயில் (40149), இரவு 11.20 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செயல்படும் ரயில் (40148), மற்றும் இரவு 11.40 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செயல்படும் ரயில் (40150) ஆகிய நான்கு மின்சார ரயில்கள், வருகின்ற நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil