தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்; துறைகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
4 ias

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அவர்களுக்கு என துறைகளையும் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இணக்கனில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக அரசு நியமிக்கிறது.

அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார்கள்.

Advertisment
Advertisements

டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு மின்சார வாரியம்.

ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

நீரஜ் குமார், ஐ.ஏ.எஸ்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

பெ. அமுதா, ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்பந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு கீழ்க்காணும்வாறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

1. டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,
தமிழ் நாடு மின்சார வாரியம்.

எரிசக்தித் துறை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

போக்குவரத்துத் துறை

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

வெளிநாடு வாழ் தமிழர் நலன்

பள்ளிக் கல்வித் துறை

உயர்கல்வித் துறை

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை

மனிதவள மேலாண்மைத் துறை

2. ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை

காடுறைதல் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

நீர்வளத் துறை

சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

இயற்கை வளங்கள் துறை

3. நீரஜ் குமார், ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

4. பெ. அமுதா, ஐ.ஏ.எஸ்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை

சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

அரசு செய்தித் தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தித் தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தித் தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.

அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: