சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலையில் மினி லாரி பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதே மார்க்கத்தில் பின்னால் வந்த கார் ஒன்று வளைவு பகுதியில் அதிவேகமாக வந்துள்ளது.
அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிலாரியின் பின் பகுதியில் மோதி நசுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“