/tamil-ie/media/media_files/uploads/2022/05/minor-girl-gage-rape.jpg)
Four minors held for raping classmate in Cuddalore district
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், 15 வயதுடைய சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு சிறுவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, மே 22 அன்று சீனியர் மாணவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால், மாணவி இந்த நிகழ்வைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரிவிக்கவில்லை, மாறாக தான் ஒரு நண்பரைப் பார்க்கச் செல்வதாக பொய் சொல்லி, விழாவுக்கு சென்றிருக்கிறாள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது வகுப்பு மாணவர்கள் சிலர், மாணவியை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும் இந்த புகைப்படங்களை உன்னுடைய பெற்றோருக்கு காட்டுவோம் என மாணவியை மிரட்டத் தொடங்கினர். அப்படி எதுவும் செய்ய வேண்டாம் என்றும், வீடியோவை நீக்குமாறும் மாணவி அவர்களிடம் கெஞ்சி உள்ளார்.
இதையடுத்து, ஜூலை 1 ஆம் தேதி, அந்த மாணவர்கள், மாணவியை பிளாக்மெயில் செய்து, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில், சிறுமி நடந்த சம்பவம் எதையும் கூறவில்லை. ஆனால், இந்த வீடியோக்கள் பள்ளித் தோழர்களின் குழுக்களிடையே பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, சிறுமி, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்து, ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர். பிறகு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகள்,கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.