அகழ்வாராய்ச்சிக்கு மேலும் 4 புதிய இடங்கள் - மத்திய அரசு ஒப்புதல்

கீழடியில் கண்டறிந்த சித்திர எழுத்துக்கள் சிந்து சமவெளி ஸ்கிரிப்ட் மறைவதற்கும், தமிழ் பிராமி ஸ்கிரிப்ட் உருவாதற்க்கும் இடையில் வரையப்பட்டதாய் உள்ளது என்று தெரிவித்தார். 

கீழடி உட்பட நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சியைத் தொடர தமிழக தொல்பொருள் துறையின் கோரிக்கைக்கு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலால் தமிழ் சங்க நாகரித்திற்கும், சிந்து சமவெளி நகரித்திற்க்கும் இடையில் இருக்கும் 1000 ஆண்டுகால வரலாற்று இடைவெளியை குறைக்க முடியும் என்று  நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மாநில தொல்பொருள் துறையின் கமிஷனர் டி. உதயச்சந்திரன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், ”  சிவகங்கையில் இருக்கும்  கீழடி,  ஈரோடில்  இருக்கும் கொடுமனல், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகலை , தூத்துக்குடியின்  ஆதிச்சனல்லூரில் இந்த  அகழ்வாராய்ச்சி நடைபெறும்”  என்று தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் நடந்த கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்க தகவலால்,   தமிழ் சங்க காலத்தின் வரலாறு  கிமு 6 ஆம் நூற்றாண்டு பழமையானது என்பது  நிரூபணமானது. அகழ்வாராய்ச்சிக்கு முன்புவரை தமிழ் சங்கத்தின் வரலாறு  கிமு 3ம் நூற்றாண்டு வரையில் இருந்து தொடங்கியாதாக கருதப்பட்டது.

கீழடியில் கண்டறியப்பட்ட ஆறு கார்பன் மாதிரிகளை அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டடு இந்த முடிவு உறுதிபடுத்தப்பட்டது . மேலும், தமிழ் பிராமி எழுத்துக்கள் (தமிழ்) கிமு 580 க்கு முற்பட்டவை என்பதும் கண்டறியப்பட்டது.

அகழ்வாராய்ச்சிகளைத் தொடர அரசு அனுமதிக்கப்பட்டுள்ளதால், சங்கம் காலத்திற்கும்,  சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை நம்மால் ஏற்படுத்த முடியும்.

மேலும் அவர் விரிவாக கூறுகையில் , சிந்து சமவெளி  ஸ்கிரிப்ட் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று சாட்சியங்கள் உண்டு. பிறகு, அது கொஞ்சம் கொஞ்சம் அழியத் தொடங்கியது.  கடந்த செப்டம்பர் மாதம் கீழடியில் கண்டறிந்த சித்திர எழுத்து  சிந்து சமவெளி ஸ்கிரிப்ட் மறைவதற்கும், தமிழ்  பிராமி ஸ்கிரிப்ட் உருவாதற்க்கும் இடையில் வரையப்பட்டதாய் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தற்போது அளித்துள்ள ஒப்புதலில், மதுரை பற்றிய ஆய்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ல் தொடங்கப்பட்ட கீழடி ஆய்வு மதுரைதென்கிழக்கு  இருந்து  13 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

அகழ்வாராய்ச்சியின் மூத்த மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், நகர வாழக்கை அமைந்ததாக கருதப்படும்  மதுரை வைகைப்  படுகை பற்றிய மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுவதாக தெரிவித்தார். வைகை படுகைக்கும் , கீழடியில் இருந்த நகர்புற வாழ்க்கைக்கும் பற்றிய புரிதல் மிகவும் தேவைப்படுகிறது என்றார்.

அடுத்த 20 இல்ல 25 ஆண்டுகளில் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கும். மதுரை கோயிலுக்கு அருகில் இருக்கும் கொந்தகை கிராமத்தில் அகழ்வு ஆராய்ச்சிக்கு ஏற்ற உகந்த இடம் என்றும் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close