மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சென்னை முதல் டெல்லிக்கு தினமும் 19 விமானங்களும் டெல்லியில் இருந்து சென்னைக்கு 19 விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.
டெல்லி விமானத்திற்கு பயணிகள் அதிகரித்து வருவதால், நான்கு கூடுதல் விமான சேவைகள் ஏர் இந்தியா நிறுவனம் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் காலை 7:50 மணிக்கும், மாலை 3:40 மணிக்கும் 2 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, டெல்லியில் இருந்து பிற்பகல் 2:45 மணிக்கும், இரவு 10:35 மணிக்கும் 2 புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து டெல்லி சென்று வரும் பயணிகள் வசதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் நான்கு சிறப்பு விமான சேவைகளை இயக்க தொடங்கியுள்ளது.
இதனால் தற்போது சென்னை-டெல்லி-சென்னை இடையே தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil