/indian-express-tamil/media/media_files/pZ1pRx23YIHUCK70Eeok.jpg)
சனிக்கிழமை மாலை ஷோரனூர் ரயில் நிலையம் அருகே திருவனந்தபுரம் செல்லும் கேரள எக்ஸ்பிரஸ் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 4 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Four sanitary workers killed after being hit by train in Kerala Palakkad
ரயில் நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோரனூர் பாலம் அருகே உள்ள ரயில் பாதையில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது புது தில்லி-திருவனந்தபுரம் ரயில் மாலை 3.05 மணியளவில் மோதியது.
துப்புரவு பணிகளுக்காக ரயில்வேயால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், மோதலின் தாக்கத்தால் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதியில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பாரதப்புழா ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்காவது சடலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
"தொழிலாளர்கள் ரயில் நெருங்கி வருவதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம், இதன் விளைவாக விபத்து ஏற்பட்டது, ஆனால் மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன" என்று ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.