ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த 100 வங்கி கணக்குகளும் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு சொந்தமானவை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா குடும்பத்தினர் வாங்கியது குறித்து சத்யம் சினிமாஸிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட கணக்குள் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு அமலான பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், போலி நிறுவனங்களின் பெயரில், பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெய்டுகள் இன்று பிற்பகல் அல்லது மாலையில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிறைவுபெறும் பட்சத்தில், இன்று மாலை விவேக் ஜெயராமன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என தெரிகிறது.
தொடர்ந்து நான்காவது தொடரும் வருமான வரித்துறையினர் ரெய்டின் Live Updates இதோ,
மாலை 05:00 - சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. விவேக் வீட்டில் கடந்த நான்கு நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மாலை 04:00 - மிடாஸ் ஆலை, விவேக் வீடு, ஜெயா டிவி அலுவலகம் என சுமார் 20 இடங்களில் தொடரும் இச்சோதனை இன்று மாலையுடன் நிறைவடைய வாய்ப்பு.
மதியம் 12:50 - செஞ்சி ப்ரத்யங்கரா தேவி கோயிலில் டிடிவி தினகரன் சிறப்பு பூஜை.
மதியம் 12:35 - சசிகலா-தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடைப்பெற்ற சோதனையில் பணமோ, நகையோ கைப்பற்றப்படவில்லை என வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல்.
மதியம் 12:15 - டிடிவி தினகரன் அணியினரை ஒடுக்கவே வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது - தங்கத் தமிழ்ச்செல்வன்
பகல் 11.45: சென்னை தி.நகரில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களில்தான் 4-வது நாள் சோதனையில் அதிக கவனம் செலுத்துவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
காலை 11:35 - சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டிற்கு வருமானவரித்துறை துணை இயக்குநர் வருகை.
காலை 11:15 - ஜெயலலிதா இறந்தபோது சோதனை நடத்தியிருந்தால் நிறைய ஆவணங்கள் கிடைத்திருக்கும்; ஜெயலலிதா மரண விசாரணையில் பிரதமர் பெயரையும் சேர்க்க வேண்டும் - திருநாவுக்கரசர்
காலை 11:00 - ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சசிகலா குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வருகின்றன. காந்தியின் பேரன் இல்லை என்று மட்டும் அல்ல; காந்தி என்ற பெயரைக் கூற கூட டிடிவிக்கு தகுதியில்லை - கே.பி. முனுசாமி.
BJP's use of the IT dept to threaten a section of AIADMK that is not aligned with it is blatant vendetta politics, with no respect for the democratic processes of our country.https://t.co/LQVoFFthNh
— Congress (@INCIndia) November 10, 2017
காலை 10:30 - ஜெயா டிவி, விவேக்கின் வீட்டில் நடந்து வரும் வருமானவரித் துறையினரின் சோதனை இன்னும் சில மணி நேரங்களில் முடிவையும் என கூறப்படுகிறது.
காலை 10:00 - மற்ற மாநிலங்களில் பாஜகவினரின் நிறுவனங்களில் கூட வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்.
காலை 09:00 - 4வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை. விவேக் வீட்டில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
TN #ITRaids , தமிழக மக்களால் நிகரிக்கப்பட்ட பிஜேபி, அதிகாரத்தை கொல்லைபுற வழியாக அதிரடியாக களவாடும் சூழ்ச்சி என்பதை தவிர வேறு இல்லை
— Mahendran cingaram (@cmahendrancpi) November 11, 2017
காலை 08:30 - சென்னையில் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் 4வது நாளாக வருமானவரி சோதனை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.