சென்னை புத்தகத் திருவிழா : சென்னையில் நான்காம் ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை தமிழ்நுால் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டு குழுமம் தலைமையேற்று நடத்துகிறது.
17ம் தேதி நடைபெற இருந்த துவக்க விழா நிகழ்வானது இன்று காலை சரியாக 10.30 மணி அளவில் நடை பெற இருக்கும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் க. நாகராஜன் அறிவித்துள்ளார். இந்த புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கி வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னை புத்தகத் திருவிழா துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்நிகழ்வின் துவக்க விழாவினை சிறப்பிக்க பல்வேறு தளங்களில் இருந்து எழுதும் முக்கிய எழுத்தாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகவிழாவின் நடுவில் கருத்தரங்கம், கவிதை வாசிப்பு, வினாடி- வினா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200 கடைகள் அமைக்கப்பட்டு அதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Fourth edition of the chennai book festival begun yesterday at the ymca grounds in royapettah
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!