பெரியாரிஸ்டுகள் லூலூ குழுவில் திருமணம் மீறிய பாலியல் விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதாக பிரான்ஸ் தமிழச்சி பாலியல் சர்ச்சையை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தமிழச்சி இவர் எழுத்தாளராக அறியப்படுகிறார். இவர் கடந்த 2 வாரமாக பெரியாரிஸ்டுகளாக அறியப்படுபவர்கள் சிலர், லூலூ குழுவில், பாலியல் விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள், திருமணம் மீறிய பாலியல் உறவு மற்றும் விபச்சாரத்துக்கு தூண்டுவதாகவும் பாலியல் விஷயங்களைப் பரிமாறிகொள்வதாகவும் தனது முகநூல் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு அதிரடியாக குற்றம் சாட்டி வருகிறார். மேலும், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தமிழச்சி, மேலும், இது தொடர்பாக, தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், பெரியாரிஸ்ட்டுகள் என்று அறியப்படுவர்கள் சிலர், லுலு என்ற வாட்ஸ்அப் குழுவில், பெரியாரிஸ்ட்டுகள் என்ற போர்வையில், திருமணம் மீறிய பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசி வருகின்றனர் என்றும் அது குழுவில் உள்ள பெண்களை விபச்சாரத்துக்கு தூண்டுவதகாவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதில், சேலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியாரிஸ்ட், பாலியல் குற்றவாளி பெரியாரிஸ்ட் ஒருவரை காப்பாற்றவும் பாலியல் புகாரில் தங்களை காப்பாற்றிக்கொள்ளவும் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவரும் அண்மையில் அரசின் பதவியைப் பெற்றவருமான மூத்த பெரியாரிஸ்ட் லூலூ குழுவில் பாலியல் விஷயங்களைப் வெளிப்படையாகப் பகிர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள், மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் ஜிம் ராஜ் மில்டன் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார். அதோடு, WSB குழுவில் உள்ள பெண்கள் மற்றும் அதில், சட்டவிரோதமான சம்பவங்கள் நடைபெற்றது பற்றியும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.
பிரான்ஸ் தமிழச்சி, பெரியாரிஸ்ட்டுகள் லூலூ குழுவில் பாலியல் விவகாரங்களை வெளிப்படையாக பேசுகிறார்கள் என்ற பாலியல் சர்ச்சை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரான்ஸ் தமிழச்சி, பெரியாரிஸ்ட்கள் என்ற பெயரில் பாலியல் விவகாரங்களில் ஈடுபடுபவர்களை அம்பலப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"