Advertisment

பிரான்சிஸ் கிருபா வழக்கை திருப்பி போட்ட 20 நிமிட பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

பிரான்சிஸ் கிருபாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Francis Kiruba case CCTV Footage

Francis Kiruba case CCTV Footage

Francis Kiruba case CCTV Footage released : நல்லது செய்ய சென்று கடைசியில் கொலைக்காரன் என்ற பழிச்சொல்லுக்கு காரணமாகி போனார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா. நடுத்தெருவில் ஒரு ஜீவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில் சக மனிதனாக உதவ சென்ற அவருக்கு கிடைத்த பெயர் கொலைக்காரன்.

Advertisment

பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது என்ற தகவல் பரவியதும் அவரின் நண்பர்களுக்கு வாசகர்களுக்கு சக கலைஞர்களுக்கு தலையில் கல்லை போட்டது போல் இருந்தது. சமூலவலைத்தளங்களில் செய்தி தீயாக பரவத் தொடங்கியது. இறுதியில் அவர் நிரபராதி என்ற பெயருடன் பிரான்சிஸ் கிருபாவை போலீசார் விடுதலை செய்தனர். பிரான்சிஸ் கிருபாவின் வழக்கை திருப்பிப் போட்ட அந்த பரபரப்பு 20 நிமிட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த வாரம், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அடையாள தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். பரட்டை தலையும் தாடியுமாக பார்ப்பதற்கே சந்தேக தோற்றத்தில் இருந்த பிரான்சிஸ் கிருபாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்த போது, அவர்கள் பரட்டை தலையுமாய் பார்ப்பதற்கே பயமாக இருக்கும் அந்த நபர் தான் அடையாள தெரியாத அந்த நபரை கொலை செய்தாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் பிரான்சிஸ் கிருபாவை போலீசார் கைது செய்து உடனே விசாரிக்க காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு தான்,அவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்ற தகவலே போலீசாருக்கு தெரிய வந்தது. இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை வெளியில் விடாமல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.போலீசாரிடம் பிரான்சிஸ் கிருபா தான் கொலை செய்யவில்லை என்றும், அந்த நபருக்கு உதவியாகவும் கூறினார்.

இதற்கிடையில் இறந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அதில் அந்த நபர் வலிப்பு வந்ததால் மாரடைப்பில் நெஞ்சடைத்து இறந்து விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கூடவே சம்பவம் நடந்த அன்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டனர். அப்போது வலிப்பால் துடிக்கும் அந்த நபருக்கு பிரான்சிஸ் கிருபா உதவும் காட்சிகள் பதிவாகி இருந்தனர்.

அதன் பின்பு, இது கொலை அல்ல இயற்கை மரணம் தான் என உறுதிப்படுத்தி காவல் துறையினர் பிரான்சிஸ் கிருபாவை விடுதலை செய்தனர். இந்த வழக்கிற்கு முக்கிய திருப்பமாக இருந்த அந்த 20 நிமிடம் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment