பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கு ஏராளமான கும்பல் நமக்குள்ளையே சுற்றி வருகிறது. அதை தடுப்பதற்காக டிஜிபி சைலேந்திர பாபு தகவல் வெளியிட்டிருக்கிறார்.
இரிடியம் முதலீடு போன்ற பெயர்களில் பொதுமக்களை ஏமாற்றி ஒருசில மோசடி கும்பல் பணம் பறித்து வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு காணொளியில் தெரிவித்துள்ளார்.

மக்கள் முதலீடாக ரூ.5 லட்சம் வைத்தால், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம் கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்தும் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.