கோவையில் பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டம் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
இத்திட்டத்தை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நடத்தும் என்ஜிஓ அமைப்பான மக்கள் சேவை மையம், ரோட்டரியுடன் இணைந்து முன்னிறுத்தியுள்ளது.
விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், "கோவை தெற்கு தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களுடன் நெருக்கமாகி அவர்களது பிரச்சினைகளை கண்டறிந்து உதவிகளை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஊக்கமளிக்கிறார். இதேபோல், மக்களுக்கு சேவையாற்றும் வானதி போன்ற எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் நீங்கள் பா.ஜனதா அரசு ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து, வெண்டிங் மேஷின் மூலம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அமுதம் பால் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படும். அதனை அருகில் உள்ள மளிகை கடைகளில் காட்டி அமுதம் பசும்பாலை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தினமும் பயனாளிகளுக்கு ¼ லிட்டர் பசும் பால் வழங்கப்படுகிறது
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil