தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இலவச முகக் கவசங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
முகம் வெளுக்க வெள்ளரிக்காய் மாஸ்க்.. ரிசல்ட் ஒரு வாரத்தில் தெரியும்!
கடந்த பல மாதங்களாகவே உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக கடந்த 3 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் இருந்து வருகிறது. இதுவரை இங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முக கவசங்களை பயன்படுத்துவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் தான் முக்கிய தடுப்பு முறையாக கருதப்படுகிறது.
செமஸ்டர் தேர்வு: மதிப்பெண் வழங்கும் நடைமுறை அறிவிப்பு
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக முகக்கவசம் விநியோகம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக்கொள்ளலாம், என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். அதோடு, குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக் கவசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”