Advertisment

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு டிச.13 வரை மூன்று வேளை இலவச உணவு: முதல்வர் அறிவிப்பு

Free hot meals for Chennai slum dwellers : டிசம்பர் 6 முதல் 13ஆம் தேதி வரை 5.3 லட்சம் குடும்பங்களில் உள்ள 26 லட்சம் பேருக்கு மூன்று  வேளை இலவச உணவு வழங்கப்படும்

author-image
WebDesk
New Update
சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு டிச.13 வரை மூன்று வேளை இலவச உணவு: முதல்வர் அறிவிப்பு

சென்னையில் நிவர் மற்றும் புரெவி  மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு இலவச உணவு திட்டம் வழங்கப்படும் என்று  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

Advertisment

இதன் கீழ், டிசம்பர் 6 முதல் 13ஆம் தேதி வரை 5.3 லட்சம் குடும்பங்களில் உள்ள 26 லட்சம் பேருக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் பணிகளை சென்னை மாநகராட்சி  மேற்கொள்ள இருக்கிறது.

முன்னதாக, புரெவி புயல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், புரெவி புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் 36 ஆயிரத்து 986 எண்ணிக்கையிலான நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான சூடான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்க நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க நான் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கு ஏற்ப, நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் புரெவி புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

Tamilnadu Weather Cyclone Puravi Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment