புதுவை அமைச்சருடன் பிரான்ஸ் முதலீட்டாளர்கள் சந்திப்பு: தொழில் தொடங்க ஆர்வம்

பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்கள் தொழில்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்துடன் ஆலோசனை.

express photo
பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்கள் தொழில்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்துடன் ஆலோசனை.

தொழில் தொடங்க அனுமதி கேட்டு பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்கள் தொழில்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்துடன் ஆலோசனை நடத்தினர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூப்பர் கேப்பிட்டல் தொழில் முதலீடு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பங்குதாரர்கள் பிரான்சிஸ்க் லெப்ரூனி, கோரன்டின் ஆர்சினி, ப்ரெரிரிக் பவுலூக், ப்ரெரிரிக் பாக்கே,
திபூட் ஜிமினெஸ் ஆகியோர் புதுச்சேரி தொழில்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

புதுச்சேரியில் தொழில் துறைகளில் முதலீடு செய்யவும், அத்துறையின் வளர்ச்சிகளில் சேர்ந்து செயலாற்ற விருப்பம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

புதுச்சேரி அரசு அனைத்து வசதிகளை செய்து, அத்துறையில் வளர்ச்சிக்கு உறுதுணையாக முடிவுகள் எடுத்து புதுச்சேரி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு பெருகும் வகையில் செயல்படும் என அமைச்சர் அவர்கள் பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: French investors meet with puduvai minister namachivayam

Exit mobile version