scorecardresearch

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

chennai corona

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், திங்கட்கிழமை சற்று குறைந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 957 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

கோயம்புத்தூரில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 230லிருந்து 219ஆக குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 180லிருந்து 168 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 133லிருந்து 127ஆக குறைந்தது. தஞ்சாவூரில் 123 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 175ஆக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 189ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்து ஆயிரத்து 735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் சேலத்தில் 82பேருக்கும், திருச்சியில் 75 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இது முந்தைய நாளைவிட சற்று அதிகம்.

திருப்பூரில் 5பேர், சேலம் மாவட்டத்தில் 4 பேர் உட்பட கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கோயம்புத்தூர் உட்பட 26 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படோர் மொத்த எண்ணிக்கை 25,63,544 ஆக உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,068 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20,385ஆக உள்ளது. கோயம்புத்தூரில் 2,008 பேரும், சென்னையில் 1,735 பேரும், ஈரோட்டில் 1,568 பேரும், செங்கல்பட்டில் 1,163 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,321 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,77,50,115 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தமிழகத்திற்கு 3,73,600 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கிடைத்துள்ளது. ஒரே நாளில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 1,90,487 மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட 99,178 பேர் உட்பட மொத்தம் 3,24,854 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2,18,31,183 ஆக உள்ளது. மே 1 முதல் தனியார் மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 15,80,885 ஆக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Fresh corona cases increases in chennai other districts

Best of Express