/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-27T123522.765-1.jpg)
chennai, chennai fire accident, fridge blast, media reporter, dead, school teacher, சென்னை, சென்னை தீவிபத்து, பிரிட்ஜ் வெடித்து விபத்து, தொலைக்காட்சி ஊழியர், பள்ளி ஆசிரியை
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பகுதி சேலையூர். இங்குள்ள தனியார் பள்ளி அருகே பிரசன்னா என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 32 ஆகிறது. நியூஸ் ஜெ.தொலைக்காட்சியின் சென்னை செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
நள்ளிரவில் பரிதாபம் : நேற்று (ஜூன் 26ம் தேதி) நள்ளிரவு, பிரசன்னா, அவரது மனைவி, தாய் ரேவதி மூவரும் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்தது. இதனால் அறை முழுவதும் புகை மூட்டமானதால் 3 பேருக்குமே மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்களால் தப்பித்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டு தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புகை வந்தது இன்று காலை இவர்களது வீட்டுக்கு வேலைக்கார பெண் வந்து கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிற்குள் இருந்து புகை வந்து கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண் பதறியடித்து கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அதிர்ச்சி அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு சென்றபோது, 3 பேருமே உடல் கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விசாரணை : சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை துவங்கி உள்ளனர். செய்தியாளர் குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் மீடியா உலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us