பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை விமாநிலையத்தின் புதிய முனையம், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் உள்பட ரூ. 2,437 கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைத்தார்.
பிரதமர் மோடியை சென்னை விமாநிலையத்தில், முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். மிகவும் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்டார். இருவரும், விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தில் சேர்ந்து நடந்தனர்.
ஹைதிராபாத்தில் இருந்துதான் மோடி சென்னைக்கு வந்தார். அங்கு மோடியை வரவேற்க தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் 4 வது முறையாக சந்திரசேகர் ராவ் மோடியை வரவேற்காமல் தவிர்த்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஏலாத்தில் இருந்து டெல்டா பகுதி விலக்கு பெற வேண்டும் என்று பிரதமர் வருகைக்கு முன்பு ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலை பிரதமர் மோடி சென்னை வருகையொட்டி தமிழகத்திற்கு நற்செய்தி கிடைத்தது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நிலக்கரி சுரங்கம் ஏலாத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விளக்கு அளித்தார்.
சென்னை பல்லாவரத்தில் மோடி பேசியபோது “ தமிழகத்திற்கு வருவதை சிறப்பாக உணர்கிறேன். வரலாறும், பாரம்பரியமும் கொண்ட இடம் இது. தேசப்பற்று, தேசியத்திற் முக்கியத்துவம் கொண்டுக்கும் இடம். மொழி மற்றும் இலக்கிய புலமை கொண்ட இடம். அதிகமான சுதந்திர போராளிகள் இங்கே இருந்துதான் வந்துள்ளனர். “ என்று அவர் கூறினார்.
புதிய உள்கட்டமைக்கு வசதிகளை திறந்து வைத்து மோடி பேசுகையில்,’ தமிழக வருடப்பிறப்பு வரும் நேரத்தில் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் திறக்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில்தான் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக கட்டடங்களை கட்டியுள்ளோம். இது ஒரு புரட்சி என்றும் அவர் கூறினார்.
”உள்கட்டமைப்புக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளோம். 2014 ஆட்சியை ஒப்பிட்டால் இது 5 மடங்கு பெரியது. ரயில்வே துறைக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கி சாதனை படைத்துள்ளோம். 2014 முன்பு எல்லா ஆண்டும் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகள்தான் மின்மயமாக்கினார்கள். ஆனால் நாஙக்ள் 4000 கிலோமீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்க மாற்றியுள்ளோம். 2014-ல் 75 விமாநிலையங்கள் இருந்தது. தற்போது150 இருக்கிறது. கடற்கரையில், துறைமுகம் அமைப்பது தொடர்பாகவும் பல்வேற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன .
2014ம் ஆண்டில் 380 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது. இந்நிலையில் தற்போது 660 மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. கடந்த 9 வருடங்களில் மொபைல் டேட்டா அதிகமாக பயன்படுத்தும் இடமாக இந்தியா மாறி உள்ளது.6 லட்சம் கிலோமீட்டர் அப்டிகல் பைபர் இணைப்பால் 2 லட்ச கிராம பஞ்சாயத்திற்கு இணைய வசதி கிடைக்கிறது.
தமிழகத்தில் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 6000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதுவே 2009 முதல் 2014 வரை அது ரூ. 900 கோடியாக இருந்தது. 2004 முதல் 2014 வரை 800 கிலோமீட்டர் மட்டுமே தேசி நெஞ்சாலை அமைந்தது. 2014 முதல் 2023-க்குள் 2000 ஆயிரம் கிலோமிட்டரில் தேசிய நெடுஞ்சாலை அமைள்ளது “ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“