காதல் ஜோடிக்கு கரம் கொடுத்த கம்யூ. கட்சி: திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு திருமணம்

திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சஞ்சய்குமாருக்கும் அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த காதல் ஜோடியின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சஞ்சய்குமாருக்கும் அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த காதல் ஜோடியின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
communist offc

காதல் ஜோடிக்கு கரம் கொடுத்த கம்யூ. கட்சி: திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு திருமணம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது அமிர்தா, மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரை சேர்ந்த 32 வயது சஞ்சய்குமார், இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், திடீரென சஞ்சய்குமார் திருமணத்துக்கு முன் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மற்றும் திருமண ஏற்பாடுகள்

Advertisment

மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அமிர்தா (எம்.எஸ்சி.), சஞ்சய்குமார் (பி.பி.ஏ.) இருவரும் பணிபுரிந்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இரு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். நாகை மாவட்டம், எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஆகஸ்ட் 27, 2025 அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்து, திருமண அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டன.

திருமண நாள் நெருங்கிய நிலையில், சஞ்சய்குமாரின் குடும்பத்தினர் மணமகள் வீட்டிற்கு வராததால் அமிர்தாவும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். சஞ்சய்குமாரின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவரது சகோதரிகளிடம் அமிர்தா விசாரித்தபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கோ அழைத்துச் சென்று விட்டதாகத் தெரியவந்தது.

போலீஸ் தலையீடு மற்றும் திருமணம்

இந்த விவகாரம் குறித்து அமிர்தாவின் சகோதரர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில், போலீசார் புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சஞ்சய்குமார் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. போலீசார் அவரை மீட்டு அமிர்தாவிடம் ஒப்படைத்தனர்.

Advertisment
Advertisements

அதன் பிறகு, திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சஞ்சய்குமாருக்கும் அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த காதல் ஜோடியின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

communist

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: