/tamil-ie/media/media_files/uploads/2021/09/tasmac-759.jpg)
Full Vaccination is must in Nilgiri District Tamilnadu Tamil News
Full Vaccination is must in Nilgiri District Tamilnadu Tamil News : அதிகப்படியான கொரோன பரவலை அடுத்து, தடுப்பூசி போடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி போடும் முயற்சி மிகத் தீவிரமாகா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்க விரும்புவோருக்கு, கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போடுவதை அதிகாரிகள் கட்டாயமாக்கியுள்ளனர்.
அதாவது, டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களும் தாங்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் எடுத்துக்கொண்டுள்ள சான்றிதழ்களைக் காட்டினால் மட்டுமே அவர்களுக்குப் பொருள்கள் வழங்கப்படும். தடுப்பூசி சான்றிதழ்கள் தவிர, TASMAC விற்பனை நிலையங்களிலிருந்து மதுபானங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை அங்குள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஒரு பகுதிதான் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். நீலகிரி மாவட்ட மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 97% தடுப்பூசி அளிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அனைத்து குடிமக்களும் இரண்டாவது ஜாப் எடுக்க வேண்டும் என்று நிர்வாகம் விரும்புவதாகவும், இந்த இலக்கை அடைய இதுபோன்ற யோசனை வந்தது என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.