முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி இன்று (ஆக. 19) நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வரின் முதன்மை தனிச் செயலாளராக இருந்த நா. முருகானந்தம், தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக திங்கள்கிழமை காலை நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, தமிழக முதல்வரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
அவருக்கு பதிலாக, பொது நூலகத் துறையின் இயக்குநராக இருந்த இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு சப் கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டதின் 27 வது புதிய ஆட்சியராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
அதேநேரம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பகவத் ஐஏஎஸ், இல்லம் தேடி கல்வி, காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“