தமிழகம் புதுச்சேரியில் கோவில்களை இந்து அறநலத்துறையின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் பாஜகவினர் கோவில் சொத்துக்களை போலி பத்திரம் மூலம் தன்வசம் படுத்தியுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை புதுச்சேரியில் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சிஅம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்துள்ள குற்றவாளிகளை கைது செய்யகோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் பேட்டையன் சத்திரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்கிழமை (ஜூலை-11) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக புதுச்சேரி சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு புறப்பட்ட ஊர்வலத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரஅடி நிலத்தை போலி பத்திரம் மூலம் பாஜக சட்டமன்ற உறுபினர்கள் ஜான்குமார், அவரின் மகன் ரிச்சர்டு ஜான்குமார் ஆகியோர் தன்வசப்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளனர். இதில் ஜான்குமாரின் உறவினர்கள் 4பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்பு உடைய அரசு அதிகாரிகள் 13 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பின், 2 ஆண்டு ஆவணங்கள் பத்திரபதிவு துறையில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலமோசடி வழக்கில் 2 பாஜக எம்எல்ஏக்களையும், இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
பாஜகவிற்கு கேள்வி
தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் உள்ள கோவில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை,புதுச்சேரியில் கோவில் சொத்துக்களை தன்வசப்படுத்தியுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுவையில் நீண்டகாலமாக தனியார் நிலங்கள், கோவில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நில மோசடிகள் தொடர்பாக அரசு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பாஜக அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு கவர்னர்களை நியமித்து அரசியல் செய்கின்றனர். கவர்னர்கள் அரசியல் பேசுவதை ஏற்க முடியாது.
காய்கறி விலை உயர்ந்து வருவதில் அரசு தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நியாயவிலையில் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை போல், புதுச்சேரி அரசும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல்வாதி போல கவர்னர் பிரச்சாரம் செய்ய அதிகாரம் கிடையாது. எனவே தமிழக கவர்னரை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு குடும்பத் தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.ஆயிரம் பெற யார் தகுதியானவர்கள் குறித்து அறிவித்துள்ளனர். இத்தொகை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜி.ராமக்கிருஷணன் பதிலளித்தார். முன்னதகா போராட்டத்தில் கட்சியின் புதுச்சேரி மாநில மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சீனிவாசன், தமிழ்செல்வன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி,சத்தியா இடைக்குழு உறுப்பினர்கள் மதிவாணன், ராம்ஜி,அன்புமணி, ராம மூர்த்தி, சரவணன், உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக ஊர்வலம் ராஜீவ்காந்தி சிலை, தட்டாஞ்சாவடி விஐபி நகர் வழியாக சென்று ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திரள் போராட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“