ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி. கே சாலையில் ஜி ஸ்கொயர் தலைமை அலுவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல அந்த அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய மற்றொரு இடத்தில் உள்ள ஜி ஸ்கொயர் பாலா என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீலாங்கரையில் கேஸினோ டிரைவ், ப்ளூ பீச் சாலை என 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதுபோல ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னை, கோவை உள்ளிட்டு அந்நிறுவனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சோதனை நடை பெற்றது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“