ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் வழங்கிய இரவு விருந்தின்போது, அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டிள்ளார்.
டெல்லியில் ஜி20 அமைப்பின் 18வது உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி உணவு விருந்து அளித்தார்.
இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரின் விருந்தில் பங்கேற்றார். இது தொடர்பாக பதிவில் “குடியரசு தலைவர் அளித்த ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில் காவேரி மேசையில் இருந்து பங்கேற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் கைகுலுக்கும் காட்சியும், அவர்களுக்கு பக்கத்தில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“