Advertisment

Tamil News Highlights: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

Tamil News live, G20 Summit 2023, Chandrababu Naidu Arrest, Seeman case, Actor Marimuthu- 9 September 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CID arrested former Andhra Pradesh CM N Chandrababu Naidu.jpg

Tamil News Today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

இந்தியா என்பதற்கு பதிலாக பாரத்

Bharat Modi

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்க; தலைமைச் செயலாளர் கடிதம்

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளர். தண்ணீர் மாசுபாடு தொடர்பான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

சந்திரபாபு நாயுடு கைதுஆந்திராவில் 144 தடை உத்தரவு

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் உள்ள 7 மண்டலங்களில் வரும் 15ம் தேதி வரை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்படுவதால் பெருமளவு தொண்டர்கள் குவிந்துள்ளனர்

G20 கூட்டுப் போர்ப் பிரகடனம் 'பெருமைப்பட ஒன்றுமில்லை' - உக்ரைன்

புது தில்லியில் இன்று G20 நாடுகளால் செய்யப்பட்ட ரஷ்யா-உக்ரைன் போர் பற்றிய கூட்டுப் பிரகடனத்திற்குப் பிறகு, உக்ரைனிய வெளியுறவு அமைச்சகம், "பெருமைப்பட ஒன்றுமில்லை" என்று கூறியது. உக்ரேனிய அமைச்சகம் ரஷ்யாவைக் குறிப்பிடாததற்காக உரையை விமர்சித்தது.

உக்ரைன் தரப்பின் பங்கேற்பு (ஜி 20 கூட்டத்தில்) பங்கேற்பாளர்கள் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள அனுமதித்திருக்கும் என்பது தெளிவாகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ பேஸ்புக்கில் எழுதினார்.

G20 தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமித்த பிரகடனம் "உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கு" அழைப்பு விடுத்தது மற்றும் உறுப்பு நாடுகளை "பிராந்திய கையகப்படுத்துதலைப் பெறுவதற்கான சக்தியைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலைத் தவிர்க்க" அல்லது எந்தவொரு அரசு பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுவதை தவிர்க்கவும் வலியுறுத்தியது. அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது பயன்பாட்டின் அச்சுறுத்தல் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் பிரகடனம் வலியுறுத்தியது.

உலக தலைவர்கள் விருந்துக்கு வரவேற்பு

டெல்லியில் ஜி20 மாநாட்டை ஒட்டி குடியரசுத் தலைவர் சார்பில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரத் மண்டபத்தில் உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் விருந்தில் பங்கேற்க உள்ளார்

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

இன்று மாலை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், ணிகம், பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளை உள்ளடக்கியதாக அவர்களின் பேச்சுக்கள் நடைபெற்றதாக பிரதமர் மோடி கூறினார். "உலகளாவிய செழுமைக்காக இந்தியாவும் இத்தாலியும் இணைந்து செயல்படும்" என்று மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்

மொராக்கோ நிலநடுக்கம் – பிரதமர் மோடி இரங்கல்

மொராக்கோ நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெறட்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்துவித உதவிகளையும் செய்ய இந்தியா  தயாராக இருக்கிறது- பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு

தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,510-க்கும் விற்பனை ஆகிறது.

சீமான் இன்று ஆஜராகவில்லை

நடிகை விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் இன்று ஆஜராகவில்லை.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதால் வரும் 12ம் தேதி அன்று ஆஜராவதாக சீமான் தரப்பு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில்144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரத்தில் இன்று தொடங்கி அக்டோபர் 15 வரையிலும், அக்டோபர் 25 தொடங்கி 31 வரையிலும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

மொரோக்கோ நிலநடுக்கம்- 300 பேர் பலி

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு

ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, இந்தியா தலைமையில் டெல்லியில் இன்று (செப்.9) தொடங்குகிறது. இதில் 30 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அதிகாரிகள், அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 தலைவர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 151 பேர் உயிரிழப்பு

மொரோக்கோவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 151 பேர் உயிரிழந்தனர். இது ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

கட்டட இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;

2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் நிறுத்தம்

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது.

சீமான் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சீமான் இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

செந்தில்பாலாஜி ஜாமீன்கோரி மனுதாக்கல்

அமலாக்கத்துறை வழக்கில் கைதான செந்தில்பாலாஜி ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மட்டுமின்றி, முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொந்த ஊரில் மறைந்த நடிகர் மாரிமுத்து உடல்

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரின் சொந்த ஊரான பசுமலைத்தேரி வந்தடைந்தது.

இறுதி அஞ்சலிக்கு பின் காலை 10.30 மணியளவில் தகனம் செய்யப்படவுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி- மோடி 

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்தியாவின் கொள்கை. வளமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது-மோடி 

'பாரத்' எனப் பெயர்ப் பலகை 

ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக இந்தியாவிற்கு பதில் 'பாரத்' என பெயர்ப்பலகை 

விஜய் மக்கள் இயக்கம்- மகளிர் அணி ஆலோசனை

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம். விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை,ஆலோசனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்பு

ஜி20 இனி ஜி21

ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் அறிவிப்பு. ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதால் ஜி 20 அமைப்பு ஜி 21 அமைப்பாக மாறுகிறது 

தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சவரனுக்கு  ரூ.160 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.5,510க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.44,080க்கும் விற்பனை

பிரேசில் வெற்றி

2026ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் வெற்றி

தேமுதிக ஆர்ப்பாட்டம்

கரூர், நெல்லை, வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில்

தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கடந்த1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம். 

சீமான் மீது மாதர் சங்கம் புகார்

சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். நடிகை விஜயலெட்சுமி புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு 

திருப்பதி - தமிழகம் பேருந்து சேவை சீரானது

திருப்பதி - தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கம். 

தரை தட்டிய இழுவை கப்பல்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக ஜெனரேட்டர் ஏற்றி வந்த இழுவை கப்பல் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு

கோவை, நீலகிரிக்கு மழை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. கோவை , நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார்.

மொராக்கோ நிலநடுக்கம்- 632 பலி 

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு மராகேஷ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு கட்டட இடிபாடுகளில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம். 

ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவை மாற்றிக் காட்டிய மோடிக்கு வாழ்த்துகள்

9 ஆண்டுகளுக்கு முன் மோடி இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னார். தற்போது ஜி20 மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை வைத்ததன் மூலம் தான் சொன்னதை செய்து விட்டார். இதற்காக அவருக்கு  வாழ்த்துகள்- உதயநிதி ஸ்டாலின்

சந்திரயா - 3 லேண்டரின் புகைப்படம் வெளியீடு

நிலவில் சந்திரயான் - 2 ஆர்பிட்டரில் இருந்து சந்திரயான் - 3 லேண்டரை எடுத்த புகைப்படம் DFSAR என்ற ரேடார் கருவி மூலம் சந்திரயான் - 2 ஆர்பிட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 44 ஆயிரத்து 80 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 510 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, 77 ரூபாயாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.

பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு

டெல்லியில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா மற்றும் பிரதமர் மோடி இடையே இருதரப்பு சந்திப்பு இங்கிலாந்து பிரதமர் உடனான சந்திப்புக்கு பின், ஜப்பான் பிரதமருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்,

"இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால், இந்தியா என்ற பெயரை அக்கட்சி எதிர்க்கிறது. நாங்கள் 'பாரத்'-க்கு விரோதிகள் அல்ல. ஆனால், பாஜக இந்தியாவுக்கு விரோதமானது" -ப.சிதம்பரம், ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர்

சென்னை உயர் நீதிமன்றம்

"பிள்ளைகள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமாக எடுத்துக் கொள்ளாமல், முறையாக விசாரணை நடத்தி, அவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை" 

சேலத்துக்கு பிறகு தேனிதான்: ஓ.பி.எஸ் சொந்த ஊரில் அண்ணாமலைதமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தேனி மாவட்டத்தில், “என் மண் என் மக்கள் யாத்திரை”யை இன்று தொடங்கி நடத்தினார்.

இது தொடர்பாக ட்விட்டரில், “பெரிய குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார், 50,000 ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலத்து மாம்பழத்திற்கு பிறகு தேனி மாம்பழம் மிகவும் பெருமை வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1700473024125043185?s=20

டெல்லி சென்றார் மு.க. ஸ்டாலின்ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் மரியாதை அளிக்கப்பட்டது.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment