Cyclone Gaja Update : கஜ புயல் : வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இப்புயல் சென்னைக்கு வடகிழக்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இப்புயல் நவம்பர் 15ம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த கஜ புயல் மிக்க வலுவடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் படிக்க : தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு பார்வை
Cyclone Gaja Update : கஜ புயல் : சென்னைக்கு பாதிப்பு இருக்குமா ?
நேற்று இந்த கஜ புயல் சென்னைக்கு வடகிழக்கில் இருந்து சுமார் மணிக்கு 12 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் இருந்து நகர்ந்து வருகிறது. வியாழன்று இப்புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வரையில் பலத்த காற்று வீசும் எனவே இன்று முதல் (12/11/2018) மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலுக்கு சென்றவர்கள் அனைவரும் கரை திரும்பும்மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வட தமிழகத்தில் அமைந்திருக்கும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 14 மற்றும் 15 தேதிகளில் மழை பெய்யும் என்றும், 2016ம் ஆண்டு வர்தா ஏற்படுத்திய அதே அளவிளான பாதிப்பினை உருவாக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இப்புயல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Cyclone Gaja Update : புயல் எச்சரிக்கை
புயல் கரையை நெருங்குவதைத் தொடர்ந்து எண்ணூர், கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனை இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடைபெறுகிறது.
தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.