'கஜ' புயல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் இதோ,
நாகை துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்:
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? அதிதீவிரப் புயலால் பெரிய அளவுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதே. ஆகவே, நாகை மாவட்ட மக்கள் மிக மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். வீட்டை வோட்டு யாரும் வெளியே போக வேண்டாம். தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனே செல்ல வேண்டியது அவசியம். (இந்த புயல் எண் மாற்றப்படலாம்)
கடலூர் துறைமுகத்தில் 9ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்:
9ம் எண் என்பது அதிதீவிரப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கிறது. இதற்கும், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனே செல்ல வேண்டியது அவசியம். (இந்த புயல் எண் மாற்றப்படலாம்)
இந்த கஜ புயல் 8 மணி முதல் 11.00 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த கஜ புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
'கஜ' புயலின் தகவல்கள் குறித்து உடனுக்குடன் நீங்கள் அப்டேட் தெரிந்து கொள்ள 'கஜ புயல் லைவ் அப்டேட்ஸ்' என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.
மேலும், கஜ புயலை எதிர்கொள்ள தேவையான டிப்ஸ் என்னென்ன என்பது குறித்து அறிய இங்கே க்ளிக் செய்யவும் கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்
கடலூர் மாவட்டத்திற்கான இலவச அவசர உதவி எண் - 1077
மேலும், 04142-220700, 221113, 233933, 221383 என்ற தொலைபேசி எண்களுக்கும் பொதுமக்கள் அழைக்கலாம்.
107.8 ரேடியோ அலைவரிசையில், கஜ புயல் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்திற்கான இலவச அவசர உதவி எண் - 1077,
மேலும், 04366-226040 , 226050, 226080, 226090 என்ற தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் அழைக்கலாம்.
கஜ புயல் பாதிக்கும் 7 மாவட்டங்களில் (கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி) இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகளை இயக்கப்படாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.