கஜ புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து டெல்டா பகுதி மக்களை மீட்டெடுக்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நிதியுதவி குவிந்து வருகிறது. பிற மாவட்ட மக்கள் தாமதமாக இந்த வீரியத்தை உணர்ந்தாலும், இப்போது நிறைய உதவிகளை அனுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க - LIVE UPDATES மிக கன மழை, 60 கி.மீ வேகத்தில் காற்று: தமிழ்நாடு, புதுவைக்கு புதிய எச்சரிக்கை
அதேசமயம், பல இடங்களில் மக்கள் நிவாரணத்துக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். இன்னும் பல இடங்களில் நிவாரண உதவிகள் சென்று சேரவே இல்லை என்று கூறப்படுகிறது. நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஒவ்வொருவராக நிவாரண உதவிகளை பணமாகவும், பொருளாகவும் அனுப்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாயும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர்.
விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளுக்குத் தலா 4.50 லட்ச ரூபாய் அனுப்பி, இந்தப் பணத்தைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் தேவையான நிவாரண உதவிகளை உடனடியாகத் தொடங்குங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
தன்னுடைய ரசிகர் மன்றங்கள் மூலம், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 50 லட்ச ரூபாய் செலவில் நிவாரணப் பொருட்களை தன் ரசிகர்களைக் கொண்டு வழங்குகிறார் ரஜினிகாந்த்.
தயாரிப்பு நிறுவனமான லைகா, நிவாரணப் பணிக்காக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், கவிஞர் வைரமுத்து 5 லட்சம், வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில், கஜ புயல் பாதிப்புக்கு டிவிஎஸ் நிறுவனம் சார்பில் ரூ.2 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் நேரில் வழங்கினர். அதே போல் கஜ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.
மேலும் படிக்க - தானேவை விட 10 மடங்கு அதிக பேரிழப்பினை ஏற்படுத்திய கஜ