கஜா புயலின் தாக்கத்தினால் சின்னாபின்னமாகிப் போயிருக்கிறது டெல்டா மாவட்டங்கள். வீடுகள், நிலங்கள், தோப்பு, ஆடு, மாடு என மக்களின் அவசிய அன்றாட தேவைகள் அனைத்தும் நாசமாகி உள்ளது. முடிந்த வரை அரசும் துரிதமாக செயல்பட்டாலும், பாதிக்கப்பட்ட பல இடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, பல கிராமங்கள் கஜ புயலின் தாக்கத்தில் இருந்து சிறிதும் மீளவில்லை.
தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாளை அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைகள் குறித்தும் தேர்வுகள் ரத்து குறித்தும் இங்கே பார்க்கலாம்,
நாகை மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்.
தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு. நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை. தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட வடதமிழகத்தில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு. நாளை காலை மிதமான மழைக்கும், பிற்பகலில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்.
திருவாரூரில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர் நிர்மல்ராஜ்.